Saturday, 15 July 2017

இரங்கல் செய்தி

நமது மாவட்ட செயலர் கிள்ளிவளவன் தாயார் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
                             அம்மையாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு நமது சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
                          அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 3மணி அளவில் மேலவாசல் அவரின் இல்லத்தில் நடைப்பெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Thursday, 13 July 2017

ஞானாஞ்சலி
           
நமது தலைவர் ஞானையா!
நம்மை மறந்தது ஏனையா!
நிறை வயது தொண்ணூற்று ஏழு
வாழ்ந்து சிறந்ததும் தொண்ணூற்று ஏழு.

ஆஜானுபாகுவான தோற்றம் - நமது
தலைமைகளின் சிறப்பே அத்தகைய
உருவேற்றம்.
குப்தா -  ஜெகன் - ஞானையா
இந்த கம்பீரம், இன்முகம்
இனி யாருக்கு!

மனித வாழ்க்கையின்
ஒவ்வோர் அங்குலமும்
வாழ்ந்து பார்த்தவர், பெருந்தலைவர்.
இவர் எழுதிய நூல்கள்
எண்ணற்றவை.
உலக அரசியல், வரலாறோடு
உன்னதமான கட்டுரைகள்.
சொல்லித் தந்த பாட வகுப்பு
சொல் வளம் மிகுந்த பேச்சாற்றல்
நாள் பூரா கேட்டோமே!

இயக்கம், கட்சி இன்னபிறவென்று
நடத்திக் காட்டிய போராட்டங்கள்
எண்ணிலடங்கா.  அவையெல்லாம்
ஏற்றம் பெற்ற நிகழ்வுகள்.

காதல், கவிதை, பாடல்களும்
கைவரப்பெற்ற கலைஞர் அவர்.
அவர் பாடி நீங்கள் பார்த்ததுண்டா!
நாங்கள் பார்த்தும், கேட்டும்
மகிழ்ந்திருக்கின்றோம்!

அவரது தலைமையின் கீழ்
சண்டையில்லை! சச்சரவில்லை!!
எவரையும் ஒதுங்கிப் போக விட்டதில்லை!
ஓரம் கட்ட நினைத்ததில்லை.

இன்றைய காலகட்டம்
அதற்கெல்லாம் விதிவிலக்கு.

ஞானகுரு, ஞானத்தந்தை
என்ற சொல்லாடல் இவருக்குச்
சும்மா வந்ததில்லை,
ஞானையா என்ற பெயரை வைத்தும் வந்ததில்லை.  உண்மை.  அது
உண்மையான உண்மை. இயற்கை
அந்த உண்மையை பெயரிலும் இணைத்தது தான் விந்தை!

தொலைத் தொடர்பில் மிகப்பெரிய
ஒன்பது சங்கங்களை ஒன்றிணைத்து
அதை NFPTE என்றழைத்து
சங்க வரலாற்றில் மாற்றத்தை
உருவாக்கிய குப்தாவுக்கு
ஆற்றலாய் நின்ற அருந்தலைவன் சொக்கத் தங்கம் ஞானையா!
60 களின் போராட்டங்கள்
அடுத்தடுத்த உத்திகள்
அரசையே கலக்கியது.
அன்று தொடங்கிய வெற்றிகள்தான்
சங்கத்தின் பாதையானது.

மனித குல விடுதலைக்காக
போராடிய அந்த மாமனிதர் இன்று நம்மிடமிருந்து முழுமையாக
விடைபெறுகிறார்.
அவரது சிந்தனைகளை,
சீரிய கருத்துக்களை
செயலில் காட்டுவோம்.
நாமும், நமது மக்களும்
செயலூக்கம் பெறுவோம்.  இதுவே
நம் தலைவனுக்கு
நாம் செலுத்தும் ஞானாஞ்சலி!

மாவட்ட சங்கம்

Monday, 10 July 2017

வாழ்த்துக்கள்

NFTE BSNL மதுரை மாவட்டத்தின் புதிய செயலர் தோழர் ராஜேந்திரன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
,
தோழர்.ஞானையா அவர்ளுக்கு வாயில் அஞ்சலி கூட்டம் திருவாரூரில் நடைபெற்ற அதன் பதிவுகள் சில காட்சிகள்Saturday, 8 July 2017

இரங்கல் செய்தி                 

        ஞானதீபம் அணைந்தது


 
தனது இளம் வயது முதல் இறுதி மூச்சுவரை ஒளிர்ந்து வந்த மார்க்ஸிய ஞான ஒளி தனது 97ஆம் வயதில் இன்றுஅதிகாலை மறைந்தது.

தபால் தந்தி ஊழியர்கள் சங்கத் தலைவராக ஒன்றிணைந்த NFPTE  பேரியக்கத்தின் தனிகரில்லா தலைவர் தோழர் ஞானய்யா இன்று கோவையில் மறைந்தார்.
மத்திய மாநில அரசு ஊழியர்களாக உள்ள ஆயி்ரக்கணக்கான 
தோழர்களுக்கு மார்க்சிய ஞானத்தை ஊட்டியவர்.
பணி ஓய்வுக்குப் பின் கட்சி வளர்ச்சியிலும் நல்ல அறிவார்ந்த புத்தகங்கள் எழுதிவதிலும் முழுக் கவனம் செலுத்தியவர்.
தலைவரின் மறைவுக்கு NFTE தஞ்சை மாவட்டம் தனது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது
தோழர் ஞானையா அவர்களுக்கு செவ்வணக்கம்
நல்லடக்கம் நாளை மதியம் நடைபெறும்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நமது சங்க கொடியை அரை கம்பத்தில் பரக்கவிடும்படி (இன்று முதல் மூன்று நாட்கள்) (08-07-2017 TO 10-07-2017)  மாவட்ட சங்கம் அறிவுறுத்தி உள்ளது

Tuesday, 4 July 2017


ஊதியக்குழு அமைத்திடக்கோரி…
NFTE கூட்டணி சங்கங்களின் சார்பாக
தொடர் உண்ணாவிரதம்தஞ்சையில்
  இரண்டாம் நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ...முதல் நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ...


Saturday, 1 July 2017

ஊதிய மாற்றம் கோரி...! கூட்டமைப்பு சார்பாக...! நடைபெறும்...! உண்ணாவிரத போராட்டம்நம்மில்...! பெரும்பான்மையோருக்கு...!
இதுவே...! கடைசி ஊதிய மாற்றம்...! எனவே...!
சிறப்பான...! ஒரு ஊதிய ஒப்பந்தத்தை..! கட்டமைப்பது...! 
அவசியம்......! என......! உரக்க...! கூவி...! 
திரள்வோம்...! தோழர்களே...!


தஞ்சை CTMX தொலைப்பேசி நிலையத்தில்
உண்ணாவிரத போராட்டம்