Monday 8 September 2014

இன்றைய தினத்தின் சிறப்புகள்(செப்டம்பர் 8)
 
உலக எழுத்தறிவு நாள்

யுனெஸ்கோ என்று பொதுவாக அழைக்கப்படும் .நா கல்வி அறிவியல் பன்பாட்டு நிறுவனம் எழுத்தறிவின்மையை அகற்றும் பொருட்டு 1965-ம் ஆண்டு செப்டம்பர் 8 -ம் நாள் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மகாநாடு ஒன்றை நடத்தியது.

இம்மாநாட்டில் எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்ப்படும் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது. எழுத்தறிவின்மையை உலகிலிருந்து அறவே அழிப்பதற்காக ஆற்ற வேண்டிய பணிகள் நடைமுறைகள் ஆகியவைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கையையும் அளித்தது.

எழுத்தறிவின்மையை போக்குவதற்காக மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8 -ம் தேதியை உலக எழுத்தறிவு நாள் என யுனெஸ்கோவின் பொதுக்குழு பிரகடனம் செய்தது. "நிலையான வளர்ச்சியும், எழுத்தறிவும்" என்ற வாசகத்தை இந்த ஆண்டு உலக எழுத்தறிவு நாள் இயக்கத்தின் கருப்பொருளாக ஐநா அறிவித்துள்ளது.