Thursday 25 September 2014

"மங்கள்யான்



"மங்கள்யான்' பயணம் வெற்றி: புதிய வரலாறு படைத்தது இந்தியா
    1. எஸ்.ராதாகிருஷ்ணன்
·         2. மயில்சாமி அண்ணாதுரை
·         3. எஸ்.ராமகிருஷ்ணன்
·         4. சிவகுமார்
·         5. உன்னி  கிருஷ்ணன்
·         6. சந்தராதன்
·         7. .எஸ்.கிரண்குமார்
·         8. எம்.ஒய்.எஸ்.பிரசாத்
·         9.எஸ்.அருணன்

செவ்வாய்கிரகசுற்றுப்பாதையில்மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதை  பெங்களூரில் உள்ள "இஸ்ரோ' கட்டுப்பாட்டு அறையில் கொண்டாடும் இஸ்ரோ விஞ்ஞானிகள்.



இந்தியாவின் "மங்கள்யான்' விண்கலத்தை, செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் புதன்கிழமை காலை 7.42 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தி, இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்தனர். இந்த நடவடிக்கைக்குப் பிறகு, மங்கள்யான் விண்கலம் நல்ல நிலையில் செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்திலிருந்து குறைந்தபட்சம் 421 கிலோமீட்டர் தொலைவும், அதிகபட்சம் 76,993 கிலோமீட்டர் தொலைவும் கொண்ட நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் சுற்றி வருகிறது.
இந்த விண்கலம், இந்தப் பாதையில் ஒரு முறை சுற்றிவர 72 மணி நேரம், 52 நிமிடங்கள், 51 விநாடிகள் ஆகும். வரும் வாரங்களில் இந்த விண்கலத்தில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இரண்டு தமிழர்கள்.ஒருவர்மங்கள்யான் திட்ட இயக்குனரான
திரு சுப்பையா அருணன் (projectdirector) அவர்கள்.இன்னொருவர்மங்கள்யானின்  பயண நிகழ்ச்சி நிரல்இயக்குனரான திரு மயில்சாமி அண்ணாத்துரை(programme director)  அவர்கள். யாரினும் கூடுதலாக இவ்விருவரும் பாராட்டுக்குஉரியவர்கள்..