Friday 14 November 2014

ஒரே செடியில் தக்காளி, உருளை காய்க்கும் அதிசயம்!

டோம்டேடோ என்ற செடியில் தக்காளியும் காய்க்கிறது, உருளைக் கிழங்கும் காய்க்கிறது. அதாவது செடியின் மேல் பகுதியில் தக்காளிகள் காய்த்துக் குலுங்குகின்றன, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்குகள் காய்த்திருக்கின்றன. தக்காளியையும் உருளைக்கிழங்கையும் இணைத்து டோம்டேடோ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பே இதுபோன்ற முயற்சிகள் இருந்திருந்தாலும், தற்போதுதான் வணிக அளவில் வந்திருக்கிறது.

தக்காளியின் தண்டையும் உருளைக்கிழங்கின் தண்டையும் இணைத்து இந்தச் செடி உருவாக்கப்பட்டிருக்கிறது. இது மரபணு மாற்றத்தால் உருவாக்கப்பட்ட செடி இல்லை. முழுக்க முழுக்க இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட செடி. 15 ஆண்டு கால உழைப்பில் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது என்கிறார் இதை உருவாக்கிய தோட்டக்கலையின் டைரக்டர் பால் ஹான்சார்ட். ஒரே செடியில் விளைந்த தக்காளி அதிக இனிப்புச் சுவையுடன் காணப்படுகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட தக்காளிகள் இந்தச் செடியில் இருந்து பறிக்கப்பட்டுள்ளன என்பது குறிபிடத்தக்கது.