Monday 24 November 2014

வேலைவாய்ப்பு

ரயில்வேயில் 950 துணை மருத்துவ பணிகள்

ரயில்வே துறையில் அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகார், சென்னை, கவுகாத்தி, கொல்கத்தா, மெய்டா, மும்பை, ராஞ்சி, செகந்திராபாத், சிலிகுரி, பாட்னா, ஜம்மு ஸ்ரீநகர் ஆகிய ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள 950 துணை மருத்துவ பணியிடங்களுக்கு அறிவிப்பு  
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:


1. ஸ்டாப் நர்ஸ்:

மொத்த இடங்கள்: 438 (பொது- 266, எஸ்சி- 58, எஸ்டி- 60, ஒபிசி- 54). வயது: 1.1.2015 அன்று 20 முதல் 40க்குள். தகுதி: நர்சிங் பாடத்தில் பிஎஸ்சி அல்லது ஜெனரல் நர்சிங் படிப்பு. சம்பளம்: ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

2. ஹெல்த் மற்றும் மலேரியா இன்ஸ்பெக்டர்:
மொத்த இடங்கள்- 227 (பொது- 126, எஸ்சி- 34, எஸ்டி- 24, ஒபிசி- 43). வயது: 1.1.2015 அன்று 18 முதல் 33க்குள். சம்பளம்: ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: பிஎஸ்சி வேதியியலுடன் ஹெல்த்/ சேனிட்டரி இன்ஸ்பெக்டர் அல்லது தேசிய தொழில் பயிற்சி கவுன்சிலின் ஓராண்டு தேசிய டிரேடு சான்றிதழ்.

3. பார்மசிஸ்ட்:

மொத்த இடங்கள்: 168 (பொது- 90, எஸ்சி- 28, எஸ்டி- 19, ஒபிசி- 31). வயது: 1.1.2015 அன்று 20 முதல் 35க்குள். தகுதி: அறிவியல் பாடங்களில் பிளஸ் 2வுடன் பார்மசி பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ. சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

4. இசிஜி டெக்னீசியன்:
2 இடங்கள் (பொது- 1, ஒபிசி- 1). வயது: 1.1.2015 அன்று 18 முதல் 33க்குள். தகுதி: பிளஸ் 2வுடன் ஓராண்டு இசிஜி டெக்னீசியன் படிப்பு.

5. ரேடியோகிராபர்:
மொத்த இடங்கள்: 25 (பொது- 13, எஸ்சி&7, எஸ்டி- 3, ஒபிசி- 2). வயது: 1.1.2015 அன்று 19 முதல் 33க்குள். தகுதி: இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் பிளஸ் 2 மற்றும் ரேடியோகிராபி/ எக்ஸ்ரே டெக்னீசியன்/ ரேடியோ டயாக்னசிஸ் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் 2 ஆண்டு படிப்பு. சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2000.

6. லேப் அசிஸ்டென்ட்:
மொத்த இடங்கள்: 26 (பொது- 16, எஸ்சி- 3, ஒபிசி- 7). வயது: 1.1.2015 அன்று 18 முதல் 33க்குள். தகுதி: மெட்ரிகுலேசனுடன் மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு. சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம்.

7. ஆய்வக கண்காணிப்பாளர்:
மொத்த இடங்கள்: 31 (பொது- 18, எஸ்சி- 6, எஸ்டி- 3, ஒபிசி- 4). வயது: 1.1.2015 அன்று 18 முதல் 33க்குள். தகுதி: பயோ கெமிஸ்ட்டிரி/ மைக்ரோ பயாலஜி/ லைப் சயின்ஸ் ஆகிய பாடங்களில் பிஎஸ்சி மற்றும் மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் டிப்ளமோ. சம்பளம்: ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

8. ஹீமோ டயாலிசிஸ் டெக்னீசியன்:
1 இடம் (பொது). வயது: 1.1.2015 அன்று 20 முதல் 33க்குள். தகுதி: பிஎஸ்சியுடன் ஹீமோ டயாலிசிஸ் பாடத்தில் டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் முன் அனுபவம். சம்பளம்: ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

9. கார்டியாலஜி டெக்னீசியன்:
4 இடங்கள் (பொது- 3, ஒபிசி- 1). வயது: 1.1.2015 அன்று 18 முதல் 33க்குள். அறிவியல் பாடத்தில் பிளஸ் 2வுடன் கார்டியாலஜி லேப் பாடத்தில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு. சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

10. ஆடியாலஜிஸ்ட்:
1 இடம் (பொது). 1 இடம் (பொது). வயது: 1.1.2015 அன்று 18 முதல் 33க்குள். தகுதி: ஆடியோ ஸ்பீச் மற்றும் தெரபியில் பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம். சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800

11. பிசியோதெரபிஸ்ட்:
9 இடங்கள் (பொது- 5, எஸ்சி- 1, எஸ்டி- 1, ஒபிசி- 2). தகுதி: பிசியோதெரபி பாடத்தில் டிப்ளமோ/ பட்டப்படிப்பு. சம்பளம்: ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

12. மாவட்ட விரிவாக்க கல்வியாளர்:
3 இடங்கள் (பொது- 2, ஒபிசி- 1). தகுதி: சோசியாலஜி/ சோஷியல் வொர்க்/ கம்யூனிட்டி எஜூகேசன் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு மற்றும் உடல்நலக் கல்வியில் 2 ஆண்டு டிப்ளமோ. சம்பளம்: ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

13. டயட்டீசியன்:
3 இடங்கள் (பொது- 2, எஸ்டி- 1). தகுதி: ஏதேனும் ஒரு அறிவியல் படிப்பில் பி.எஸ்சியுடன் டயட்டிக்ஸ் பாடத்தில் ஓராண்டு முதுநிலை டிப்ளமோ மற்றும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் 3 மாதம் பயிற்சி அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்தில் எம்.எஸ்சி., வயது: 1.1.2015 அன்று 18 முதல் 33க்குள்.

14. கண்நோய் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் மூக்கு கண்ணாடி விற்பனையாளர்:
1 இடம் (பொது). கண்ணொளி இயலில் பிஎஸ்சி அல்லது டிப்ளமோ. சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. வயது: 1.1.2005 அன்று 18 முதல் 33க்குள்.

15. கள பணியாளர்
(ஆண்): 1 இடம் (பொது). தகுதி: வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் பிளஸ் 2. வயது: 1.1.2015 தேதியின்படி 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

16. பல் உடல்நலவியல் வல்லுநர்:
1 இடம் (பொது). தகுதி: உயிரியல் பாடத்தில் பி.எஸ்சியுடன் பல் நலவியல் பாடத்தில் 2 ஆண்டு சான்றிதழ் அல்லது டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் அனுபவம். வயது: 1.1.2015 தேதியின்படி 18 முதல் 35க்குள். சம்பளம்: ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

17. கண் பரிசோதகர்:
2 இடங்கள் (பொது- 1, ஒபிசி- 1). தகுதி: கண்ணொளி இயல் பாடத்தில் பிஎஸ்சி அல்லது டிப்ளமோ. வயது: 1.1.2015 தேதியின்படி 18 முதல் 33க்குள். சம்பளம்: ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

18. காதொலி பரிசோதகர்:
2 இடங்கள் (பொது- 1, ஒபிசி- 1). தகுதி: காதொலி இயல் பாடத்தில் பிஎஸ்சி அல்லது டிப்ளமோ. வயது: 1.1.2015 தேதியின்படி 18 முதல் 33க்குள். சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் ரூ.2,400.

19. எக்ஸ்ரே டெக்னீசியன்:
1 இடம் (பொது). தகுதி: இயற்பியல், வேதியியல் பாடங்களில் பிளஸ் 2 மற்றும் ரேடியோகிராபி/ எக்ஸ்ரே டெக்னீசியன்/ ரேடியோ டயாக்னசிஸ் பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ. சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. வயது: 1.1.2015 தேதியின்படி 18 முதல் 33க்குள்

20. கேத் லேப் டெக்னீசியன்:
1 இடம் (பொது). தகுதி: கார்டியாக் லேப்பில் பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம். வயது: 1.1.2015 தேதியின்படி 18 முதல் 33க்குள்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100. இதை ஆன்லைனில் டெபிட்/ கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் செலான் மூலமோ அல்லது தபால் அலுவலகங்கள் மூலமோ செலுத்தலாம். எஸ்சி., எஸ்டியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் உள்ள காலியிடங்களுக்கு ஒரே நாளில் தேர்வு நடப்பதால் விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு மண்டலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

சென்னை ரயில்வே மண்டல காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள்www.rrbchennai.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.12.2014.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 8.2.2015.