Monday 10 November 2014

மீத்தேன் அரக்கன் பற்றி சில தகவல்கள்

1.நிலத்தடியில் சுமார் 6000 அடி ஆழத்தில் நிலக்கரியோடு இருக்கும் மீத்தேனை எடுக்க நிலக்கரி இருக்கும் மட்டம் வரை நிலக்கரிப் படிவத்தில் இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.

2.கடும் உப்பும், பிற மாசுகளும் நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும் தாவர உயிரியல் மற்றும் நுண்ணுயிர்களைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது.


3.அதோடு நிலம் சுடுகாடாய் மாறும்.

4.கடல் நீர் உள் நுழையும்.

5.நிலம் சுமார் 20 அடிகளுக்கு உள்வாங்கும்.

6.கட்டிடங்கள், பாலங்கள், ஆற்றுக்கரைகள் , கோயில்கள் சிதையும்.நிலநடுக்கங்கள் ஏற்படும் .

7.குடிநீர் , பாசன நீர் தரும் நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப் போகும்.

8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும் ஆழ்துளை குழாய் இட பயன்படுத்திய ரசாயனங்கள், மீத்தேன் ஆகியவை கலக்கும்.
இச்செயல் முறை மண்ணையும், நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக நாசம் செய்யும்.

ஒப்பந்தம் போட்டிருக்கும் ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும் இடம் 691 சதுர கிலோமீட்டர் .ஆனால் பாதிப்பு ஏற்படபோகும் மூன்று மாவட்டங்களின் பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர் அதாவது 21 லட்சம் ஏக்கர் நிலங்களை நாசம் செய்யும்.

மொத்த ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை 2000.
அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும் மாவட்டங்கள் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூரும் தான். இதனால் காற்றும் மாசுபட போவதால் அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாதிக்கபோகும் கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம்.

ஒட்டுமொத்தமாக இப்பகுதி பாலைவனமாய் மாற போவதால் 50 லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாய் நிற்கிறது..சென்ற அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடைபெறும் போராட்டம் காரணமாய் இந்த அரசு தற்காலிகமாய் நிறுத்தி வைத்துள்ளது.ஜனவரி 30, 2015 அன்று முடிய போகும் இந்த ஒப்பந்தம் மட்டும் மீண்டும் தொடர்ந்தால் .....தமிழகத்தை யாராலும் காப்பாற்ற இயலாது..அதற்கு முன் மக்கள் விழித்தெழ வேண்டியது மிக அவசியம் மற்றும் அவசரமும் கூட.