Monday 3 November 2014

நவம்பர் 04 முகரம்


முகரம்
இஸ்லாமியர்களின் புது வருடம் 
முகரம்...
முஸ்லிம் சகோதரர்களின் 
முதல் மாதம்...
கர்பலா போரில்..
கடமை செய்து உயிர் துறந்த..
நபிகள் நாயகம் அவர்களின் பேரன் 
இமாம் ஹுசைனின்..
தியாகத்திருநாள்...
நினைவு கூர்வோம்...

வேலை வாய்ப்பு

  இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பட்டதாரி இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு



மத்திய அரசின் நவரத்னா அந்தஸ'து பெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப'பரேஷன் நிறுவனத்தின் ஆண்டு விற்பனை ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்திற்கு 188 ஆக உள்ளது.இதன் மும்பை மற்றும் விசாகப்பட்டினம் சுத்திகரிப்பு நிலையங்களில் காலியாக உள்ள 'கிராஜூவேட் இன்ஜினியர்கள்' பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

கிராஜூவேட் இன்ஜினியர்கள்.

துறைகள்:

மெக்கானிக்கல்:

மெக்கானிக்கல், மெக்கானிக்கல் மற்றும் புரெடக்ஷன் பாடத்தில் பி.இ. பட்டம்

சிவில்:

சிவில் பாடத்தில் பி.இ. பட்டம்.

எலக்ட்ரிக்கல்:


எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன், அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ. பட்டம்.

இன்ஸ்ட்ரூமென்டேசன்:

இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ரூமென்டேசன் மற்றும் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேசன், இன்ஸ்ட்ரூமென்டேசன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன் மற்றும் ஃப்ராசஸ் கன்ட்ரோல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ. பட்டம்.

கெமிக்கல்:

கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலியம் ரீபைனிங் அண்ட் பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலியம் ரீபைனிங் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ. பட்டம்.

விண்ணப்பதாரர்கள் கேட் - 2015 தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

வயது:


30.6.2015ன்படி 25க்குள். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், ஒபிசியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை உண்டு.

கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் குழு விவாதம், நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

அவர்களுக்கு 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும். அப்போது அவர்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.33 ஆயிரம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:


ரூ.260 (சேவை வரி மற்றும் வங்கி கட்டணம் ரூ.35 உட்பட). எஸ்சி., எஸ்டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதை ஸ்டேட் வங்கியில் 'HPCL Powerjyoti A/c No. 32315049001' என்ற கணக்கில் செலுத்தவும். கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 18.12.2014.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.2.2015.

கேட்-2015 ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள்: 31.1.2015 முதல் 14.2.2015 வரை.