Friday, 31 October 2014

AITUC  
வாழிய.. வாழியவே..
அடிமைத்தளை அறுக்கப்பிறந்த 
அரிவாள்..சுத்தியல்..

அக்டோபர் 31 - 1920

அடிமட்ட உழைப்பாளியின் 
போர்ப்பறை...

பெரும் தலைவர்கள் பணி செய்த 
பாசறை...

பாரதத்தின் முதல் தொழிற்சங்கம்...
AITUC... வாழ்க... வாழ்கவே..

OCT 31


Wednesday, 29 October 2014

காலவரையற்ற 
வேலை நிறுத்தம்

அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
சங்க கூட்டமைப்பு  முடிவு

28/10/2014 அன்று  அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
சங்க கூட்டம் டெல்லியில் NFTE  அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது தலைமையில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.


  • DELOITTE குழு அறிக்கையை எதிர்த்து..
  • BSNL மற்றும் MTNL  இணைப்பை எதிர்த்து.. 
  • தனியாக TOWER COMPANY ஆரம்பிப்பதை எதிர்த்து...
  • மத்திய அரசின் BSNL விரோத பொதுத்துறை விரோத கொள்கைகளை எதிர்த்து 
03/02/2015 முதல் 
நாடு தழுவிய 
கால வரையற்ற 
வேலை நிறுத்தம்
  • டிசம்பர் 2014ல் கோரிக்கை தினம் 
  • ஜனவரி 2015ல் 3 நாட்கள் தர்ணா 
  • நாடு தழுவிய போராட்ட விளக்க கூட்டங்கள் 
  • நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை விளக்குதல் 
  • நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் கூடி மற்ற நடவடிக்கைகளை இறுதிப்படுத்துதல்.
தோழர்களே....
ஊழியர் நலமுற்றிட 
BSNL வளம் பெற்றிட..
களம் காண்போம்..
இதுவே தருணம்...

வாழ்த்துக்கள்


தமிழ் மாநில கூட்டு ஆலோசனைக்குழு 
RJCM உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட 
NFTE கடலூர் மாவட்டச்செயலர் 

தோழர். இரா.ஸ்ரீதர் 
அவர்களின் பணி சிறக்க 
வாழ்த்துகின்றோம்.

பணி நிறைவு


Monday, 27 October 2014

வெள்ள நிவாரண நிதி

ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்காக இந்த மாத சம்பளத்தில் ஒரு நாள் அடிப்படை சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளது.

கார்ட்டூன் . . . கார்னர் . . .


Friday, 24 October 2014

ERP

E...R...P... 

ERP எனப்படும் புதிய திட்டத்தை அமுல்படுத்த 
தமிழ் மாநில நிர்வாகம் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றது. 
ERP அமுலாக்கம் செய்யப்பட்ட கர்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்களில் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை 
சந்தித்து வருகின்றனர். 

தற்போதைய தமிழக CGM முன்பு STR பகுதியில் CGM  ஆக இருந்தபோது அங்கு ERP திட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். 
எனவே இங்கும் அதிக ஆர்வம் செலுத்துகின்றார். 

தற்போதைய நிலவரப்படி அனைத்து பில் பட்டுவாடாக்களும் 
மாவட்ட அளவில் 31/10/2014க்குள் முடிக்கப்படும். 
அதன் பின் பணம் பட்டுவாடா செய்யும் அதிகாரம்
 மாநில நிர்வாகத்திற்கு மட்டுமே உண்டு. 
மாவட்ட நிர்வாகங்களுக்கு இருக்காது. 

நவம்பர் 14 வரை எங்கும் எந்த வித பணப்பட்டுவாடாக்களும் இருக்காது. நமது நிர்வாகங்கள் நல்ல நாளிலேயே தில்லை நாயகங்கள்.. 
இது போன்ற சூழ்நிலையில் சொல்லவே வேண்டியதில்லை...  

GPF.. FESTIVAL, ஒப்பந்த ஊழியர் சம்பளம்,LIC , மனமகிழ்மன்றம்,சங்க சந்தா,வருமான வரி என பிரச்சினைகள் சூழ நின்று சூன்யம் வைக்கும். 

மாநிலச்சங்கங்கள் 24 மணி நேரமும் 
செயல்பட வேண்டிய நிலை உருவாகும். 
தமிழகத்தின் அனைத்து சங்கங்களும் இணைந்து இன்னும் ஒரு மாதம் இந்த வேதனையை தள்ளி வைக்க வேண்டுகோள் விட்டுள்ளன. 

எதையும் காதில் போட்டுக்கொள்ளாத நிர்வாகம் 
என்ன நிலை எடுக்கும் என தெரியவில்லை...
எதையும் எதிர் கொண்டு பழகியுள்ள நமது தோழர்கள் இதையும்  எதிர்கொள்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்...

Monday, 20 October 2014

வாழ்த்து
ஒப்பந்த ஊழியர்

ஒப்பந்த ஊழியர்  
அக்டோபர் 2014 VDA 
01/10/2014 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கான 
VDA  விலைவாசிப்படி உயர்விற்கான 
உத்திரவு வெளியாகியுள்ளது. 
அதன்படி..

A  பிரிவு நகரம்  - 01/04/2014 அன்று கூலி ரூ.329= 
                                - 01/10/2014 அன்று கூலி ரூ.332/=  மாதம் ரூ.90/= உயர்வு.

B  பிரிவு நகரம்  - 01/04/2014 அன்று கூலி ரூ.273= 
                                - 01/10/2014 அன்று கூலி ரூ.276/=  மாதம் ரூ.90/= உயர்வு.

C  பிரிவு நகரம்  - 01/04/2014 அன்று கூலி ரூ.220= 
                                - 01/10/2014 அன்று கூலி ரூ.222/=  மாதம் ரூ.60/= உயர்வு.

01/10/2014 முதல் DA நிரந்தர ஊழியர்களுக்கு அதிகளவு கூடியுள்ளது.
ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு மிகக்குறைவாக கூடியுள்ளது.
சித்திரகுப்தன் கணக்கை விட நமது DA கணக்குகள் விசித்திரமாக உள்ளன.

Sunday, 19 October 2014

போனஸ்                    

Saturday, 18 October 2014

டிலாய்ட் அறிக்கை பரீட்சார்த்தமாக அமலாக்கம்!டிலாய்ட் அறிக்கையின் பரிந்துரைகளை மராட்டிய மாநிலத்தில் பரீட்சார்த்தமாக அமலாக்க BSNL நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான உத்திரவை வெளியிட்டுள்ளது.உத்திரவு நகல் கீழே தரப்பட்டுள்ளது.

Friday, 17 October 2014

திருவாரூர் NFTE-BSNL திருவாரூர்

தோழர்கள் NLCஒப்பந்த ஊழியர்கள்  போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து ஆர்பாட்டம் 
என்.எல்.சி ஒப்பந்த
தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு
45 நாட்களாக போராடும்  என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நிரந்தர தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.நெய்வேலியில் நடைபெற்ற நிரந்தர பணியாளர்கள் தொழிற்சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி வரும் 19ஆம் தேதி இரவு 10 மணி முதல் 20 ஆம் தேதி 10 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுஅதற்குள் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் தீரமும் கொண்டது. மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டற்ற காளை போல் பொங்கியெழுந்து, வெள்ளையரோடு நேருக்கு நேர் நின்று, வீரசமர் புரிந்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். ஓங்காரம் எழுப்பி வெள்ளையனை மிரளச் செய்தவன். அவரின் நினைவு தினம் இன்று..

Monday, 13 October 2014

நிர்வாகிகள்:

சம்மேளனச் செயலர் தோழர் கோ.ஜெயராமன் சம்மேளனச் செயலர் தோழர் S.S.கோபாலகிருஷ்ணன்நிரந்தர அழைப்பாளர்  புதுவை தோழர் P. காமராஜ் 
( தோழர் பட்டாபி அருகில்)


ஜபல்பூரில் அக்-10முதல் 12 வரை நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள்:
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
        தலைவர்: தோழர் இஸ்லாம் அகமது (டெல்லி)
 பொதுச்செயலர்: தோழர் சந்தேஸ்வர்சிங். (பீகார்)
        பொருளாளர்: தோழர் A.ராஜ்மொளி                                           சம்மேளனச்  செயலர்கள்:                                                                                                                                    தோழர்:  K.S.சேஷாத்திரி (கர்நாடகா)
                      தோழர்: K.K.சிங் (ஜார்கண்ட்)
                      தோழர்: ராஜ்பால் சிங் (டெல்லிஎன்.பி.ஆர்)
                      தோழர்:   N.J.பாட்டியா ( குஜராத்)
                      தோழர்:  G.ஜெயராமன் (தமிழ்நாடு)
                      தோழர்:     குல்சார் சிங் (மத்தியபிரதேசம்)
                     தோழர் :  S.S. கோபாலகிருஷ்ணன் (தமிழ்நாடு)
                      தோழர்:      K.அஞ்சையா (ஆந்திரா)
                     தோழர்  :        T.R.  ராசசேகரன் (சென்னை)
தோழர் காமராஜ் தமிழ்நாடு சிறப்பு அழைப்பாராக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரையும் மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.  இனி வரும் காலம் இனிதாக அமைய பொறுப்புணர்ந்து செயல்பாட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.