Sunday 3 May 2015

பேச்சு வார்த்தை முடிவுகள்

தோழர்களே, நாம் கடந்த ஏப்ரல் 21,22 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்தோம். அதன் அடிப்படையில் இன்று 01-05-2015 நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டோர்
Secretary DOT, Shri Rakesh Garg, Special Secretary (T) Smt. Rita Teotia, Member (Finance) Smt. Annie Moraes, Member (Services) Shri N.K.Yadav, Administrator USOF Smt. Aruna Sunderarajan, Joint Secretary(T) Shri V.Umashankar, Director(PSU) Shri Sanjeev Gupta and other officers were present from DOT. BSNL was represented by CMD Shri Anupam Shrivastava, ED(Finance) Smt. Sujata Ray, Sr.GM(SR) Shri Shamim Akhtar and other officers. From the Forum side Coms. C.Singh (NFTE) Chariman, V.A.N.Namboodiri, Convener Forum, P.Abhimanyu(BSNLEU), K.Jayaprakash(FNTO), Prahlad Rai(AIBSNLEA), K.Sebastin (SNEA), S.V.S.Subrahmaniam(BTEU), Suresh Kumar(BSNLMS), Rasheed Khan(TEPU), H.P.Singh(BSNLOA), Sunil Gautam (SNATTA), R.P.Sahu (AIGETOA), Rakesh Sethi (AIBSNLOA), Hari Singh(BTU BSNL), Rana Pratap(BEA) and S.Raveendran(SEWA BSNL)

பிரச்சனைகள்
பதில்கள்
தொலைதொடர்பு துறையிலிருந்து கார்ப்பரேசன் ஆக மாறும்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் செயல்படுத்த்ப்பட வேண்டும்.அமைச்சராக இருந்து திரு.ராம்விலாஸ் பஸ்வான் BSNL  நலிவடையாமல் இருக்க அனைத்து நிதிஉதவியும் செய்யபடும் என உறுதி அளித்தார்.ஆனால்கடந்த ஐந்து வருடங்களாக எல்லாநிதி உதவிகளும் நிறுத்தப்பட்டு நலிவடையும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.   நிறுத்தப்பட்ட அனைத்தும்திருப்ப தரவேண்டும். USOF மூலமாக வரவேண்டிய ரூ.1250கோடி 2012-13 முதல் இன்று வரை வரவில்லை.
கிராமப்புற பகுதிகளுக்கு சேவை செய்வதால் ஏற்படும் ரூ.10,000 கோடி ரூபாய் நஷ்டம் இன்னும் ஈடு செய்யப்படவில்லை. BWA spectrum சரண்டர் செய்த தொகை ரூ.6700 கோடி ரூபாய் உடனடியாக தரப்பட வேண்டும். வருமான வரி விலக்கு அளிக்கப்பட்ட தொகை ரூ.7000 கோடி இதுவரை தரப்படவில்லை.
ஓய்வு ஊதியம் பணம் நாம் தருவதால் வரும் இழப்பான ரூ.2400 கோடி சரிசெய்யப்படவேண்டும்.
TERM CELL ல் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு DOT,தான் தரவேண்டும்.அது BSNL தருவது உடனே நிறுத்தப்பட வேண்டும்.
உபகரணங்கள் வாங்க உடனடியாக ரூ.10,000 கோடி தரப்பட வேண்டும்.
ADC from USOF மூலமாக தரப்படவேண்டிய தொகை ரூ.1250/-கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அது உடனடியாக தரப்படும்.
BWA Spectrum  சரண்டர் தொகை தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
TERM CELL வேலை செய்யும் ஊழியர்களுக்கு கொடுத்த சம்பளம் கூடிய விரைவில் திரும்ப பெறப்படும்.

உடனடி கடன் தொகை ரூ.10,000வங்கிகளிலிருந்து பெற்றுத் தர ஏற்பாடுசெய்யப்படும்

மொபைல்சேவையில் தனியாருக்கு கொடுப்பதை போலவே சரிசமமான் வாய்ப்பு நமக்கும் தரப்படும்.


2007க்கு முன்னும் பிறகும் ஒய்வு பெற்ற தோழர்களுக்கான 78.2% IDA Pension fixation தரப்படவேண்டும்.
இது மேலும் காலதாமதம் ஆவதால் அதிகப்படியான் நஷ்டத்தை ஓய்வு ஊதியம் பெற்றவர்கள் அடைகிறார்கள். மேலும் பென்சன் தருவதில் உள்ள 60சதவீதம்-40 சதவீதம் என்ற நிலை மாற்றப்படவேண்டும். இது நமக்கு கூடுதல் பலுவை தருகிறது. முழுபென்ஷனையும் அரசே வழங்க வேண்டும்.
78.2 கிராக்கைபடி இணைப்பு ஓய்வு ஊதிய பெறும் நபர்களுக்கு உடனடி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பென்சன் தொகை தருவதில் உள்ள சதவீத 60%-40%என்ற விகிதமுறை குறித்து அரசிடம் திரும்பவும் விவாதிக்கபடும். இது குறித்து ஊழியர் தரப்பு கொடுத்த குறிப்புகள்பரிசீலிக்கப்படும்
BSNL and MTNL இணைப்பு கூடாது.
BSNL and MTNLன் இணைப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
BSNL. காலியாக உள்ள டைரக்டர்கள் போஸ்ட் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்
இது குறித்து அரசுக்கு உடனை தெரிவித்து முடிவு எடுக்கப்படும்
பி.எஸ்.என்.எல் கட்டிடங்கள் போன்ற அசையா சொத்துக்கல் உடனடியாக நமக்கு DOT  மாற்றி தரப்பட வேண்டும்
சொத்து கண்க்கெடுப்பு இன்னும் முழுவதுமாக முடியவில்லை. நிச்சயமாக சொத்து மாற்றம் குறித்து
முடிவு செய்யப்படும்
அனைத்து அரசு நிறுவனங்களும் BSNL  சேவையை மட்டுமே பயன்படுத்து வேண்டும் என அரசு உத்தரவு இடப்படவேண்டும். சேவை குறைபாடு களைய ஊழியர் தரப்பு ஆலோசனைகள் ஏற்கபட வேண்டும்.
BSNL சேவையில் திருப்தி இல்லா காரணத்தால் நிறைய நிறுவனங்கள் அதனை பயன்படுத்துவது இல்லை. இது குறித்து உடனடி முடிவு எதுவும் எடுக்க முடியாது.

நேரடி நியமனம் செய்யபட்டவர்க்ளுக்கு 30% சேவைஇறுதி பலன் கிடைக்கவேண்டும்.குறைவான சம்பள விகிதம் களையப்பட வேண்டும்
இது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.