Friday 10 July 2015



உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11ம் நாள் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது சமீபத்திய மதிப்பீட்டின்படி உலக மக்கள்தொகை 700 கோடியை தாண்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.. மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சுற்றுச் சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சினைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், இடப் பற்றாக்குறை, அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடி போன்றன முக்கிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன.