Friday 6 November 2015

சொந்த வீடு, வாகனம் வைத்திருப்பவர்களுக்கு சிலிண்டர் மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு








புதுடெல்லி: சொந்தமாக வீடு, கார் மற்றும் இருசக்கரம் வைத்திருப்பவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்க வேண்டாம் என்று முந்தைய காங்கிரஸ் அரசு முன் வைத்த திட்டத்தை அப்படியே அமல் படுத்த மோடி அரசு முடிவு செய்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு மானியம் தற்போது பயனாளர்கள் வங்கி கணக்கில் வைக்கப்படுகிறதுஆண்டொன்றுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் அளித்து வரும் நிலையில் வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டு கொடுக்க வேண்டும் என்றும் மோடி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதை ஏற்று இதுவரை 42 லட்சம் பேர்  சிலிண்டர் மானியத்தை விட்டு கொடுத்தள்ளனர். இந்த நிலையில் சொந்த வீடு, வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மானியத்தை தாமாகவே நிறுத்தி விடலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நிதி அமைச்சகம் ஏற்பாடு செய்த பொருளாதார கருத்தரங்கில் பேசிய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை சூசகமாக வெளியிட்டுள்ளார்.