Saturday 28 February 2015

27.02.15 டெல்லி FORUM முடிவுகளின் சுருக்கம்...



புதிய முடிவுகளை அனைத்து கிளை சங்கங்களும் சிரமேற்கொண்டு அமல் படுத்திடவேண்டுகிறோம்...

Friday 27 February 2015

28.02.15 இன்று...சர்.சி.வி.ராமனின் பிறந்த நாள் . . .

இந்தியாவின் மகத்தான விஞ்ஞானிகளில் ஒருவரான 


சர்.சி.வி.ராமனின் 


பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 28) தேசிய 



அறிவியல் நாளாக கொண்டாடப்படுகிறது . . .

BSNL விரிவாக்கம்

BSNL நிறுவனம் தனது விரிவாக்கத்திற்காக
ரூ.11,000/= கோடி முதலீடு செய்யவுள்ளது என்று  
இலாக்கா அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத்
 நாடாளுமன்றத்தில் 25/02/2015 அன்று 
எழுத்து வடிவில் தகவல் அளித்துள்ளார்.

தொலைபேசி நிலையங்களை நவீனப்படுத்துவது...
 வலைப்பின்னல் அமைப்பை NETWORK  மேம்படுத்துவது. 
நக்சலைட்கள் தடம் பதித்த பகுதிகளில்
 செல் கோபுரங்கள் அமைப்பது 
போன்ற பணிகளில் இந்த முதலீடு செய்யப்படும்.


BSNL மற்றும் MTNL  நிறுவனங்கள் 
தங்கள் சேவையை மேம்படுத்துவதற்கும்.. 
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரமான சேவை அளிக்கவும்  உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள தகவல்களின்படி 
  • ரூ.4804 கோடி செலவில் 14421 2G சேவை செல் கோபுரங்களும்...10605 3G சேவை செல் கோபுரங்களும் அமைக்கப்படும்.
  • ரூ.600 கோடி செலவில் தரை வழி சேவை மேம்படுத்தப்படும்,,, மற்றும்  தொலைபேசி நிலையங்கள்  நவீனப்படுத்தப்படும்...
  •  ரூ.350 கோடி செலவில் தொலைபேசி நிலையங்களில் C-DOT  மூலம் பழைய தொழில்நுட்பங்கள் புதிய தொழில் நுட்பங்களாக மாற்றப்படும்...
  •  ரூ.3568 கோடி செலவில் நக்சல் பகுதிகளில் செல் கோபுரங்கள் அமைப்பதற்கான பணி BSNLக்கு வழங்கப்படும்...
  •  ரூ.1976/= கோடி செலவில் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் செல் சேவை வழங்கப்படும்.
  • டெல்லியில் 1080 3G கோபுரங்களும்.. 800  2G கோபுரங்களும்..மும்பையில் 566  2G கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளன.

Thursday 26 February 2015

பணி நிறைவு


நாட்டின் எந்த பகுதிக்கு இடம் மாறினாலும் வேறு செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறினால் அதே எண்ணில் பேசும் வசதி மே 3–ந் தேதி அமலுக்கு வருகிறது



நாட்டின் எந்த பகுதிக்கு இடம் மாறினாலும், வேறு செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறினால் அதே எண்ணில் பேசும் வசதி மே 3–ந் தேதி அமலுக்கு வருகிறது.சேவை நிறுவனத்தை மாற்றும் வசதிதற்போது, ஒரே தொலைத்தொடர்புவட்டத்துக்குள், அதாவது ஒரே மாநிலத்துக்குள்தான், வேறு செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை தக்க வைத்துக் கொள்ள முடியும்.அதே சமயத்தில், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு இடம் மாறிய ஒருவர், வேறு செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறினால், டெல்லியில் வாங்கிய சிம்கார்டு எண்ணை தக்க வைத்துக் கொள்ள முடியாது. புதிதாக மாறிய நிறுவனம் அளிக்கும் எண்ணுக்கு மாற வேண்டி இருக்கும்.
புதிய வசதி
இந்நிலையில், நாட்டின் எந்த பகுதிக்கு இடம் மாறினாலும், அதே செல்போன் எண்ணில் பேசும் வசதி, மே 3–ந் தேதி அமலுக்கு வருகிறது. இதற்காக, ‘மொபைல் எண் மாற்றம்’ (எம்.என்.பி.) தொடர்பான உரிம ஒப்பந்தத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கடந்த நவம்பர் 3–ந் தேதி திருத்தம் செய்தது. இந்த திருத்தம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் நாடு முழுவதும் இந்த வசதி அமல்படுத்தப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.அதன்படி, மே 3–ந் தேதி இந்த வசதி அமலுக்கு வருகிறது.
ட்ராய்
இதற்கேற்ப, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானட்ராய்’, தொலைத்தொடர்பு மொபைல் எண் மாற்ற ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அத்திருத்தம், மே 3–ந் தேதி அமலுக்கு வருவதாக கூறியுள்ளது.எனவே, நாட்டின் எந்த பகுதிக்கு இடம் மாறிய பிறகும், செல்போன் சேவை நிறுவனத்தை மாற்றும்போது அதே எண்ணில் பேசும் வசதியை, மே 3–ந் தேதியில் இருந்து பெறலாம்.

 

Thursday 19 February 2015

மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்

மருத நிலம் மயானம்  ஆவதோ ?... 
நஞ்சை நிலம்  நஞ்சாவதோ ?...



மீத்தேன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி 
20-02-2015 அன்று தஞ்சையில் நடைபெறும் தொடர் முழக்க போராட்டத்தில்  கலந்துகொள்வோம்.

Wednesday 18 February 2015

TTA பதவி உயர்வு - இலாக்கா போட்டி தேர்வு அறிவிப்பு...

Image result for bsnl tta exam 2015  2014  ம் வருடத்திற்கான TTA பதவி உயர்வ, போட்டி தேர்வு அறிவிப்பு - கார்ப்பரேட் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது
அதன்படி . . .
* முறையான அறிவிப்பு  :- 07.03.2015 அன்று வெளியிடப்படும் 
* தேர்வு நாள்:-  07.06.2015 அன்று நடைபெறும் 
* தேர்வு நேரம்:- காலை 10 முதல் 13 வரை இருக்கும் 
* நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்வுகள் நடத்தப்படும்
* 3 மாதத்திற்க்குள் முடிவுகள் வெளியிடப்படும்.

இன்று பிப்ரவரி 19ம் நாள் மாவீரன் சிவாஜின் பிறந்த நாள்.


ஒப்பந்த ஊழியர்களின்  சம்பளப் 
பிரச்
னை  வலியுறுத்தி திருவாரூரில்  நடந்த   போராட்டம்

Tuesday 17 February 2015

ERP- விடுப்பு விண்ணப்பிப்பது எப்படி?





http://sp05rpx1.erp.bsnl.co.in/irj/portal

ன்ற இணையளதத்துக்குச் செல்லவும்.
User Id என்ற இடத்தில் HRMS எண்ணின் முதல் எண்ணைத் தவிர்த்து மீதி எட்டு எண்களை டைப் செய்யவும்.
(உதாரணம் 197600000 என்பதில் 97600000 என டைப் செய்ய வேண்டும்.
ரகசிய எண்ணை (Password) டைப் செய்யவும்.  
பிறகு ஒரு திரை வரும்.
அதில்  இடது பக்கத்தில் welcome என்ற இடத்தில் உங்கள் பெயர் வரும். அதற்குக் கீழ் உள்ள Employee Self Service என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு வரும் திரையில் வலது பக்கத்தில் “Working time”  என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு வரும் திரையில் இடது பக்கத்தில் “Leave Request”
என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு வரும் திரையில் name of leave என்பதில் என்ன விடுப்பு  தேவை என்பதைத் தேர்வு செய்யவும்.
(Casual laeave, EL,Commuted Leave, RH)
அதன் பிறகு வலது பக்கத்தில் From என்பதில் தேதியை தேர்வு செய்யவும். பிறகு To  என்பதில் தேதியை தேர்வு செய்யவும்.
பிறகு Reason to leave என்பதில் Personal, Illness என தேவைக்கேற்றவாறு டைப் செய்யவும்.
பிறகு கீழே உள்ள Check என்ற பட்டனை கிளிக் செய்யவும். விடுப்பை அனுமதிக்கும் உரிய அதிகாரியின் பெயர், பதவி திரையில் வரும். அதன் பிறகு send என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
உங்கள் வேண்டுகோள் உரிய அதிகாரிக்குச் சென்று விடும்.
* குறியிட்ட இயடங்கள் கட்டாயம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
பாஸ்வோர்டை மிகவும் கவனமாக கையாள வேண்டுகிறோம்.
பிறகு தவறாமல் திரையின் வலது பக்கத்தில் உள்ள LOGOFF என்ற பட்டனை கிளிக் செய்யவும். பிறகு வரும் திரையில் yes என்ற பட்டனை கிளிக் செய்யவும்.