Sunday 28 June 2015

ஒவ்வொருவருக்கும் PAY SLIP கைகளில் கிடைக்க ஏற்பாடு...

அருமைத் தோழர்களே ! ஒவ்வொருவருக்கும் PAY SLIP கைகளில் கிடைப்பதில் தற்போது சிரமம் உள்ளதால் அனைவருக்கும்  PAY SLIPகிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு  உரிய ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

Pay Slip  e mail மூலம் இனி அனைவரும் பெறலாம்,அதற்க்கென ஊழியர்கள் தங்கள் personal mail ID பயன் படுத்தலாம். மெயில் ID  ESS  PORTAL ல் பதிவு செய்துகொள்ளலாம்,OFFICIAL மெயில் ஆக இருக்கவேண்டிய அவசியமில்லை, மாத ஊதியம் GENERATE பணி முடிந்தஉடன் மாநில PAY ROLL குழு இந்த பணியை செயல்படுத்தும்

கம்ப்யூட்டர்   புலப்படாதோர்க்கு, அந்தந்த UNIT / SUPERVISOR கள்  ஊழியர்க்கான PAYSLIP-ஐ, PRINT  எடுத்து ஊழியர் கையில் சேர்ப்பர். இந்த திட்டம் இந்த ஜூன்-2015 மாத சம்பளத்திலிருந்து அமலாக்கம் செய்யப்படும்  என CORPORATE  அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணி நிறைவு வாழ்த்துக்கள்


Friday 26 June 2015


TTA கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை
01/01/2007க்குப்பின் பணியில் சேர்ந்த TTA  தோழர்களுக்கு 
10/05/2010 முதல் கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை வழங்கிட 
BSNL BOARD ஒப்புதல் அளித்துள்ளது. 

01/01/2007க்குப்பின் பணியில் சேர்ந்த 
TTA  தோழர்களுக்கு30 சத ஊதிய நிர்ணயம் செய்யப்படாததால் 
பெரும் ஊதிய இழப்பு தொடர்ந்தது. 

நமது NFTE  மத்திய சங்கமும் 
SNATTA சங்கமும் இணைந்து மிக நீண்ட நாட்களாக இப்பிரச்சினையை தீர்க்கக்கோரி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். 
தற்போது இந்த  பிரச்சினை முழுமையாக  தீர்க்கப்படா விட்டாலும் 
5க்கு 2 பழுதில்லை என்ற கணக்கில் தீர்வை எட்டியுள்ளது.

மேற்கண்ட முடிவு TTA தவிர 
வேறு கேடர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. 
01/01/2007க்குப்பின்  
பல ஆயிரம் தோழர்களுக்கு ஆண்டு உயர்வு  தேக்க நிலை தொடருகிறது..
சேவையில் மூத்தோர் இளையோர் சம்பள முரண்பாடு தொடருகிறது..
நாலு கட்டப்பதவி உயர்வால் ஏற்பட்ட குழப்பங்கள்  தொடருகிறது..
ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் செய்வதில் தாமதம் தொடருகிறது..
பதவிப்பெயர் மாற்றம் செய்வதில் அலட்சியம் தொடருகிறது..

இப்படியாக சலிப்புக்கள்  தொடர்ந்தாலும் 
ஆறுதல் பரிசாக TTA தோழர்களின் பிரச்சினை 
 தன்னால்  முடிந்தவரை  தீர்வை எட்டியுள்ளது.

Wednesday 24 June 2015

ERP-யில்

பண்டிகைக்கால கடன் பெறுவதற்கு காலம்
குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கபட வேண்டும். அதற்கான கால அட்டவணை கீழே....

Sunday 21 June 2015

இன்று உலக யோகா தினம்...

ஆசனங்களில் அசத்தும் அதிசயப் பாட்டி!வயசு அதிகமில்லை ஜென்டிமேன்...93!
நானம்மா பாட்டிக்கு வயது 93. 'உருவத்தைப் பார்த்து வயதைக் கணக்கிடாதே’ என்பது நானம்மா பாட்டிக்கு சரியாகப் பொருந்தும். ஆறு அடியை எட்டும் உயரத்தில் ஆரோக்கியமாக வலம் வருகிறார். 50 வகையான யோகாசனங்களை அசாத்தியமாகச் செய்து நம்மை விழி விரியவைக்கிறார்.
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ள நானம்மாளை சந்தித்தோம். கோவை கணபதியில் வீடு. தேன் கலந்த தண்ணீர் கொடுத்து உபசரித்தார். தாகத்தில் நாம் செம்பை வாயில் கவிழ்க்க, 'மளமளன்னு குடிக்காத கண்ணு! பொறுமையா சுவைச்சுக் குடி' என்று சொன்ன வார்த்தைகளிலேயே, அவர் வாழ்க்கையை எவ்வளவு ரசித்து வாழ்கிறார் என்பது புரிந்தது.

Friday 19 June 2015

வரலாற்றில் இன்று ஜூன் 20,

  1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார்.

Wednesday 17 June 2015

ஜூன்-17, வாஞ்சிநாதன் நினைவு நாள் . . .





இன்று ஜூன் 17 - வீரன் வாஞ்சிநாதன் உயிர்த் தியாகம்செய்நினைவுநாள்
 இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டத்தில் தமிழகத்தின் பங்கு கணிசமானது. தமிழகத்தில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்த செம்மல்கள் வரிசையில், கலெக்டர் ஆஷ் கொலைக்கு காரணமான 'வீரன் வாஞ்சிநாத'னுக்கும் முக்கிய இடம் உண்டு.
நெல்லை அருகே உள்ள செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன்.
வாஞ்சிநாதன் மிகவும் மதித்துப் போற்றிய .. சிதம்பரனார் மற்றும்., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.
இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்தாருடன்  கொடைக்கானலுக்குச்  புறப்படத் தயாராக இருந்தார்.
யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.
ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட, தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு, வீர மரணம் எய்தினார்.நினைவை போற்றுவோம்.