Thursday 29 October 2015

RETIREMENT


மத்திய சங்க கடிதங்கள் 
நமது மத்திய சங்கம் 
கீழ்க்கண்ட பிரச்சினைகளை வலியுறுத்தி 
BSNL  நிர்வாகத்திற்கு கடிதங்கள் எழுதியுள்ளது.


  • இந்த ஆண்டு வருமானம் 800 கோடி உய்ரந்துள்ளதால் BSNL   ஊழியர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்க வேண்டும்.
  • BSNLலில் பணியமர்த்தப்பட்ட நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் அளிப்பதற்கான கொள்கை உடனடியாக வகுக்கப்பட வேண்டும்.
  • TTA  மற்றும் TELECOM MECHANIC  தோழர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். அதிகாரிகள் தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வருவது போல் ஊழியர்களுக்கு தாய்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டும்.
  • 78.2 சத  IDA  அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட வேண்டும்.
  • DELOITTEE குழு அமுலாக்கத்தின் போது உபரியாகும் ஊழியர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே விற்பனைப்பிரிவு போன்ற பகுதிகளில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Tuesday 27 October 2015

இலஞ்ச ஒழிப்பு - விழிப்பு வாரம்


அக்டோபர் 26 - 31 
http://www.indiacsr.in/en/wp-content/uploads/2013/11/Vigilance-Awareness.jpg

நாடு முழுக்க அக்டோபர் 26 முதல் 31 வரை
 இலஞ்ச ஒழிப்பு விழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

Sunday 25 October 2015

அக்-24, சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு ...

1857ஆம் ஆண்டைத்தான் வட இந்தியாவில், சிப்பாய் கலகம் நடந்ததையொட்டி, இந்திய முதல் சுதந்திரப் போர் என்பதாக பதிவு செய்யப்பட்டதுஆனால், அதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே 1801 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 10ஆம் தேதி திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் நின்றுகொண்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் பிரகடனத்தை, மருது பாண்டியர்கள் அறிவித்தார்கள் என்ற செய்தி முக்கியமான ஒரு நிகழ்வுற்கண்ட நினைவு தினம், மருது சகோதரர்களை கதாநாயகர்ளாக்குவதற்கோ, அவர்களை வீரர்களாக்கிவிட்டு, நாம் கோழைகளாக நிற்பதற்கோ எடுத்துக்கொள்வது நியாயமான நினைவேந்தலாக இருக்காதுமாறாக, நமது மூதாதையர்கள், தமிழ்நாட்டில் இந்த மண்ணை நேசித்தவர்கள், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த கதைகள், நமக்கு இன்றும் கூட அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஊடுருவல்களும், ஆதிக்கங்களும் இருக்கின்ற சூழ்நிலையில், மீண்டும் மீண்டும் நினைவேந்தி தொடர்ந்து போராட உணர்வுகளை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே விவசாயத்தில், நிதி மூலதனத்தில், ராணுவத்தில் நுழைகின்ற அந்நிய கரங்களை, மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்ட உணர்வுகளுடன் கணக்கு பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்று அந்த நினைவு நாள் நம்மைக் கேட்கிறது.....

கார்ட்டூன் . . . கார்னர் . . .

இரங்கல் செய்தி



                    
 தோழர்  S.இளங்கோவன் SR.TS(OP),  அவர்களின் தாயார் இன்று காலை ( 25-10-2015)   இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும்   மாவட்ட சங்கத்தின் சார்பில்  இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 இறுதி நிகழ்ச்சி  (26-10-2015)மாலை  அவரது சொந்த ஊரில்  நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.