Wednesday 10 August 2016

களம் காணும் முன்பே கனிந்த கோரிக்கை !



78.2 சத  IDA இணைப்பு... 
BSNL ஊழியர்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. 
NFTE இரண்டாம் சங்க அங்கீகாரம் பெற்ற பின் 
78.2 சத இணைப்பு நனவானது.

ஓய்வு பெற்ற  தோழர்களுக்கும்..
78.2 கைக்கெட்டாமலே  இருந்தது.
இன்று அவர்களுக்கும் அது கிட்டியுள்ளது.

ஊழியர்களின் சம்பளப்பட்டியலிலே
68.8 என்று ஒரு அடிப்படைச்சம்பளம்...
78.2  என்று ஒரு அடிப்படைச்சம்பளம்...
HRAவைக் கணக்கிடவே 68.8 என்ற கணக்கு...

78.2ல் அடிப்படைச்சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்ட பின் 
வீட்டு வாடகை மட்டும் 68.8ல் கொடுப்பது முறையல்ல என்று 
நமது சங்கம் பிரச்சினையை எழுப்பியது. 
நிர்வாகம் நிதி நிலையைக் காட்டி கைவிரித்தது. 
ஆனாலும் நமது சங்கம் தொடர்ந்து 
கை உயர்த்தியது. காய் நகர்த்தியது.

நமது தொடர் முயற்சியின் பலனாக நிர்வாகம் 
78.2ல் வீட்டு வாடகை அளிக்க ஒத்துக்கொண்டுள்ளது. 
BSNL உருவாக்க தினமான 01/10/2016 முதல் 
இது அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

78.2 சத IDA  அடிப்படையில் HRA வழங்க
Management Committee  முடிவெடுத்துள்ளது.
விரைவில் உத்திரவுகள் வெளியாகும் !