Tuesday 23 February 2016

செய்திகள் 


உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் 
7வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் போட்டியிடும் சங்கங்கள்  விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/03/2016.
நமது NFTE சங்கத்தின் சார்பில் தேர்தலில் 
போட்டியிட விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

 மேலும் உடனடியாகத் தேர்தல் அதிகாரிகளை 
நியமிக்குமாறு மாநில நிர்வாகங்களை  டெல்லி 
 CORPORATE அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
வங்கிக்கடன் 
UNION வங்கி போன்ற வங்கிகள் நமக்கு கடன் கொடுப்பதற்கு 
கடுமையான நிபந்தனைகளை  விதித்த காரணத்தினால்  புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுல்படுத்தப்படவில்லை. இன்னும் இரண்டு வாரங்களில்  கூடுதல் சலுகைகளுடனும், கடுமையான நிபந்தனைகள் இல்லாமலும் இரண்டு வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என 
டெல்லி நிர்வாகம் நமது சங்கத்திடம் தெரிவித்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
GPF...
22/02/2016க்குப்பின் GPF நிதி ஒதுக்கீடு  நடைபெறும் என்று நம்பப்படுகிறது. ஆயினும் GPF சம்பந்தமாக CORPORATE அலுவலகம் கேட்டிருந்த சில விவரங்களை அனுப்பாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பில்லை என்றும்  கூறப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------
BSNL நேரடி ஊழியர் ஓய்வூதியப்பலன்கள் 
BSNLலில் நேரடி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கான 
புதிய ஓய்வூதியத்திட்டம் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. 
இதனிடையே  18ந்தேதி டெல்லியில் 
NFTE மற்றும் AIBSNLEA  சங்கங்களிடம் 
இத்திட்டம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், 
BSNL தனது பங்காக 3 சத பங்களிப்பைச்செய்வதாகவும்..
 ஒவ்வொரு ஆண்டும் பங்களிப்பு சதவீதம் பரிசீலிக்கப்படும் 
எனவும்  நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

15 ஆண்டுகளாக ஓய்வூதியப்பலன்களோ, 
பாதுகாப்போ இல்லாமல் BSNL நேரடி  ஊழியர்கள் 
நிராதரவாய் BSNLலில் பணிபுரியும் நிலை 
நமது சங்கத்தால்  சுட்டிக்காட்டப்பட்டது. 
மேலும் 3 சதப்பங்களிப்பு குறைவென்றும்...  
நிர்வாகம்  கூடுதல் பங்களிப்பு 
CONTRIBUTION அளிக்க வேண்டும் 
எனவும்  கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
இப்பிரச்சினை மார்ச் 4 அன்று கூடவுள்ள 
BSNL வாரியக்கூட்டத்தின்  ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
JTO இலாக்காத்தேர்வு 
JTO இலாக்காத்தேர்வை எதிர்த்து ஏற்கனவே
 இராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில்.. 
கேரளா மற்றும் ஒரிசா மாநிலங்களிலிருந்தும் 
சில தோழர்கள் வழக்கு மன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. 
இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும். 
இருந்தபோதும் நமது மத்திய சங்கம் சம்பந்தப்பட்ட 
தோழர்களை சந்தித்து சிக்கலைத் தீர்ப்பதற்கு முயன்று வருகிறது.

Sunday 21 February 2016

வாழ்த்துக்கள்.

SEWA BSNL தமிழ் மாநில சங்கத்தின் மாநாட்டில் 
மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட 
தோழர் T.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கும்
 மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நமது
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.




TEPU சங்க அகில இந்திய மாநாட்டில் NFTE-BSNL,        SEWA BSNL  சங்க தலைவர்கள் பங்கேற்பு !!



 

Friday 19 February 2016

வருத்தம் சொல்லும் வைப்பு நிதி 
  • பிள்ளைகளின் படிப்புக்கட்டணம் 
  • பெற்றோர்களின் மருத்துவச்செலவு 
  • ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை 
  • சுமங்கலி பூஜை 
  • வீட்டு மராமத்து 
என்று எத்தனையோ காரணங்களைச்சொல்லி 
வைப்பு நிதி பட்டுவாடாவிற்கு   விண்ணப்பம் செய்து காத்திருக்கும் அப்பாவிகளின்  கவனத்திற்கு...

ஜனவரி 2016 வரை BSNL ஊழியர்களுக்குப் பட்டுவாடா செய்யப்பட்ட GPF வைப்புநிதி தொகையினை BSNLக்கு அந்தந்த 
மாநில  DOTCELL CCAக்கள் பட்டுவாடா செய்யாதவரை..
 
BSNL ஊழியர்களுக்கு வைப்பு நிதி பட்டுவாடா நடக்க வாய்ப்பில்லை என்று டெல்லி நிர்வாகம் மாநில  தலைமை கணக்கு  அதிகாரிகளுக்கு  
16/02/2016 அன்று  உறுதிபடஅறிவித்துள்ளது. 


இனி வைப்புநிதியை நம்பிப் பலனில்லை....
ஈட்டிக்காரர்களிடம் தஞ்சமடைவதைத்தவிர வழியில்லை...

இதனிடையே நமது 
அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அவர்கள் 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச்சந்தித்து உடனடியாக 
வைப்பு நிதியை பட்டுவாடா செய்யச்சொல்லி வற்புறுத்தியுள்ளார் 
என்பது மட்டுமே ஆறுதல் தரும்  செய்தியாகும்.

இப்போதுதான் நமது தோழர்களுக்கு...
பட்டு.. வாடா.. என்பதின் பொருள் புரிகிறது...

முகில் குடம் உடைத்துப் பீறிடும்  மழைத்துளி
பனிக்குடம் உடைத்து வீறிடும்  புதுக்குழவி...

கார்முகில்  களித்தாடும் தோகை மயில்..
வாட்டம் போக்கும்   வைப்புநிதித்தொகை..

எப்போ.. வரும்.. எப்படி வரும்...
மனிதா.. உனக்கு அது புரியாது...
மகாதேவனுக்கும் அது  தெரியாது...

புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்று...
கவலை கொண்ட மனதை கவிதை சொல்லி ஆற்று...

Thursday 18 February 2016

மத்திய சங்க மடல்கள்



 நமது மத்திய சங்கம் கீழ்க்கண்ட மடல்களை 
பல்வேறு பிரச்சினைகளின் தீர்விற்காக 
BSNL நிர்வாகத்தின் கவனத்திற்கு அனுப்பியுள்ளது.

JTO இலாக்காத்தேர்வு 
3 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நடைபெறவிருந்த  
JTO  இலாக்காத்தேர்வு நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது இளம் TTA தோழர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது. மேலும் JTO பதவிகள் நிரப்பப்படாத நிலையில் BSNL சேவை வெகுவாக பாதிக்கப்படும் நிலையும் உருவாகும். எனவே நிர்வாகம் இப்பிரச்சினையை சட்ட ரீதியாக சந்திப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு தேர்வு நடப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என 
மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது..


JAO இலாக்காத்தேர்வு 
ஏறத்தாழ 3 ஆண்டுகளாக JAO இலாக்காத்தேர்வு நடைபெறாததால் தற்போது நடத்தப்படவிருக்கும் JAO இலாக்காத்தேர்விற்கு 55 வயதுடைய தோழர்களையும் தேர்வெழுத  சிறப்பு அனுமதி வழங்குமாறு 
BSNL நிர்வாகத்தை மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.


GPF வைப்பு நிதி ஒதுக்கீடு 
GPF பட்டுவாடா வழங்குவதற்கான  நிதி ஒதுக்கீட்டை 
மாநிலங்களுக்கு உடனடியாக மேற்கொள்ளுமாறு 
BSNL நிர்வாகத்தை மீண்டும் நமது சங்கம் வலியுறுத்தியுள்ளது.


7வது உறுப்பினர் சரிபார்ப்பு
7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் 10/05/2016 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 24/04/2016 அன்றுதான் தற்போதைய அங்கீகாரம் முடிவடைகிறது. எனவே தற்போதைய அங்கீகார காலம் வரை அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்க வேண்டும். 25/04/2016லிருந்துதான் 
தேர்தல் நடத்தை விதிகள் அமுல்படுத்தப்பட வேண்டும் 
என  நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Monday 8 February 2016

நமது மத்திய சங்கம் 33-வது தேசிய குழு கூட்டத்தில்
எடுக்கப்பட்டதன் விளைவாக...
MDF-க்கு இலவச அழைப்பு...

 
 
 
நமது குரூப் C மற்றும் D ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள SERVICE
 CUG கைபேசியிலிருந்து, தொலைபேசி நிலைய
MDF / TEST ROOM-ல் உள்ள LANDLINE இணைப்பை
தொடர்பு கொண்டால் அந்த அழைப்பிற்கு கட்டணம்
வசூலிக்கப்பட்டு வந்தது.
இப்பிரச்சனையால்... நமது Telecom Mechanic ஊழியர்கள் 
பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். 
ஊழியர்களின்... இப்பிரச்சனைக்கு... தீர்வு கண்டிட...
நமது மத்திய சங்கம் 33-வது தேசிய குழு கூட்டத்தில்
எடுக்கப்பட்ட நமது கோரிக்கை ஏற்கப்பட்டு 
03-02-2016 அன்று நிர்வாகத்தால்
இதற்கான உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.
இனி... நமது TM ஊழியர்கள் MDF / TEST ROOM-ல் உள்ள
தரைவழி தொலைபேசி இணைப்புகளை இலவசமாக
தொடர்பு கொள்ளலாம்.

Saturday 6 February 2016

தமிழ்மாநிலசெயற்குழு.....


ஏழாவதுஉறுப்பினர்சரிபார்ப்பை நோக்கி .... தமிழ்மாநிலசெயற்குழு.....
வேலூரில்சூழுரை!

பல கடுமையான சவால்களை BSNL ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ளதற்போதைய காலகட்டத்தில் 
பல நல்ல தீர்வுகளைகண்ட போராட்ட அனுபவங்களையும்,

வேதனைகளையும் சாதனைகளாக மாற்றும் சூட்சமத்தையும்,  அதற்கான வல்லமையும் பெற்ற NFTE சங்கம்,  7வது சங்க அங்கீகாரத் தேர்தலில் முதன்மைச் சங்கமாகவெற்றி பெற வேண்டியதுகட்டாயதேவையாகும்.
       
 அந்த குறிக்கோளோடு அனைத்து நேச
சக்திகளையும்  ஓரணியில் திரட்டிட  வேலூரில்  
6-2-16 அன்று நடந்த  தமிழ்  மாநில சங்கத்தின் செயற்குழுமுடிவெடுத்துஉள்ளது.

தமிழகத்தில் வழக்கம்போல மீண்டும் மகத்தான  வெற்றிவாகை சூடிட அனைவரும் அயராது பாடுபடுவோம் என்று சூழுரைக்கபட்டது.  
அனைத்து மாவட்டச்செயலர்களும் தங்கள் மாவட்டங்கள் உறுப்பினர் சரிபார்ப்பை சந்தித்த, சந்திக்க உள்ள வழிமுறைகளை பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி, அடுத்து வரும் சரிபார்ப்பிலும் தமிழகத்தில் நமது சங்கத்தை முதன்மை சங்கமாக கொண்டுவர உறுதி பூண்டனர். மாநில சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.






வெகு சிறப்பாக நடைபெற்றது.    20 க்கு மேற்பட்ட தஞ்சை தோழர்கள் பங்கேற்றனர்.
அந்த
  திசைவழியில் பணியாற்ற அனைத்து தோழர்களையும்  அறைகூவி   அழைக்கிறது தஞ்சை மாவட்டச் சங்கம்
ஜனவரி சம்பளத்தில்... 

விட்டுப் போன... ரூபாய்.500...





நமது குரூப் C மற்றும் D ஊழியர்களுக்கு... ஒவ்வொரு வருடமும்...
சோப்பு, துண்டு, டம்ளர், பேனா, டைரி மற்றும் வாட்டர் பாட்டில்
ஆகியவற்றை வழங்குவதற்கு பதிலாக ரூபாய். 500/- 
(குரூப் C ஊழியர்களுக்கு) மற்றும் ரூபாய். 300/- 
(குரூப் D ஊழியர்களுக்கு) வழக்கமாக ஜனவரி மாத சம்பளத்தில்
சேர்த்து வழங்கப்படும். ஆனால் 2016 ஜனவரி சம்பளத்தில் 
இந்த தொகை வழங்கப்படவில்லை.

உடனடியாக... நமது மாநில சங்கம் இந்த பிரச்சனையை 
நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. பிரச்சனையின்
தன்மையை உணர்ந்து 02-02-2016 அன்று நிர்வாகம் 
இதற்கான உத்தரவை வெளியிட்டது.

2016 பிப்ரவரி மாத சம்பளத்தில்... குரூப் C ஊழியர்களுக்கு
ரூபாய். 500/-ம் குரூப் D ஊழியர்களுக்கு 
ரூபாய். 300/-ம் வழங்கப்படும்.

Monday 1 February 2016


சங்க அங்கீகாரத்தேர்தல்  

 

 

7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் அறிவிப்பை BSNL நிர்வாகம் 01/02/2016 அன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 26/04/2016 அன்று தேர்தல் நடைபெறும்  என்று சொல்லப்பட்டு தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.


01/02/2016
தேதி அறிவிப்பின்படி...

  • தேர்தல் நாள் : 10/05/2016
  • முடிவு அறிவிக்கும் நாள் : 12/05/2016
  • சங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/03/2016.

 

  • வாக்காளர் பட்டியல் 01/03/2016க்குள் இறுதி செய்யப்பட வேண்டும்.
  • 30/04/2016 வரை பணி ஓய்வு பெறுவோருக்கு  வாக்காளர்  பட்டியலில்இடமில்லை.
  • தேர்தல் அறிவிப்பு செய்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்களுக்கு இலாக்கா மாற்றல் இடக்கூடாது.

 

தோழர்களே...

களம் காண்போம்... 
                      ஊழியர் நலம் காப்போம்....
                    இணைந்த கரங்களே... எழுக... 
                        எதிர்ப்போரை  வெல்க...

 

நமது சின்னம் 
 
 
இணைந்த கரங்கள்