Tuesday 12 September 2017

செல்ல விட மாட்டோம்… சேவை மையங்களை…







நாடு முழுவதுமுள்ள...BSNLன்...
3300 வாடிக்கையாளர் சேவை மையங்களில்...
சுமார் 500 சேவை மையங்களைத் 
தனியார் வசம் ஒப்படைக்கத்துடிக்கும்
BSNL நிர்வாகத்தின் மோசமான முடிவை எதிர்த்து
சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…..

கண்டன உரை

தோழமைப்பங்கேற்பு 

தூய சேவை… நம் கொள்கை…
துரித சேவை…. நம் குறிக்கோள்….
தூய சேவை... தொடர்ந்திடுவோம்…
துரித சேவை... பெருக்கிடுவோம்….
தனியார் சேவை... தடுத்திடுவோம்…
அணி திரள்வீர்…. தோழர்களே….




தர்மபுரி மாவட்டத்தில் TRANSMISSION பிரிவில் பணிபுரிந்த தோழர்கள் 02/09/2017 அன்று பணிக்காக சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியது என்ற கொடும் செய்தி கேள்வியுற்று மிக்க துயரம் கொள்கின்றோம். இரண்டு தோழர்கள் உயிர் நீத்துள்ளனர். நான்கு தோழர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  உயிர் நீத்த தோழர்.ஜீவா புதிதாக BSNLலில் 
JE பணிநியமனம் பெற்றவர். மற்றொரு தோழர்.கஜேந்திரன் 
நீண்ட நாட்களாக ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிபவர். 

இரண்டு தோழர்களின் குடும்பங்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் இல்லை என்பது மிக்க கொடுமை. இருவருக்குமே 
EPF திட்டத்தில் உள்ள மிகச்சொற்பக் குடும்ப ஓய்வூதியமே கிடைக்கும்.  BSNL நியமன ஊழியர்களுக்கு இன்னும் ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை. அகால மரணம் அடையக்கூடிய ஊழியர்களுக்கு புதிய நலத்திட்டம் அமுல்படுத்தப்படுவதும் பரிசீலனையில்தான் உள்ளது. பணியில் இருக்கும் போது உயிர் நீக்கும் ஒப்பந்த ஊழியர்களின் நிலை இன்னும் கொடுமையானது. BSNLக்காக உழைத்து உயிர் நீத்த தோழர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது ஒவ்வொரு ஊழியரின் கடமையாகும். மாநிலம் தழுவிய அளவில் இதற்காக ஒரு நிதி திரட்டப்பட்டு அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்பட வேண்டும்.

உயிர் நீத்த தோழர்களின் மறைவிற்கு 
 நமது மனங்கசிந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம். 
 
அனிதா... கலைக்கப்பட்ட கனவு… 
மருத்துவப் படிப்பு கலைந்தது... மரணம் அழைத்தது...
மோசமான ஒரு  சமூகத்தில்..
தற்கொலைகள் உற்பத்தி செய்யப்படும்….
என்றார் கார்ல் மார்க்ஸ்…

இதோ…
இந்தியதேசத்தில்…
எண்ணற்ற தற்கொலைகள்
உற்பத்தி செய்யப்படுகின்றன….

அதில் உச்சக்கட்டம்தான்..
நீட் தேர்வால்..
மருத்துவப்படிப்புக் கனவு கலைந்த…
மாணவி அனிதாவின் தற்கொலை…

இது தற்கொலையல்ல… கொலை…
ஒரு சமூகத்தின் மீதான கொலை….
ஒரு இனத்தின் மீதான கொலை…

மருத்துவராகி…
எண்ணற்ற உயிர்களைக்
காக்க வேண்டிய ஒரு உயிர்..
இன்று மரித்து விட்டது…

இந்த தேசத்தில்…
வசிப்பது அரிது…
மரிப்பது மட்டுமே எளிது….

நீட்தேர்வை ரத்து செய்வோம் என
நீட்டி முழக்கினார்கள்…
நெட்டைப் புலம்பல்கள்…

சாக வேண்டியது…
அனிதாக்கள்  அல்ல…
மானங்கெட்டு வாழும்…
அதிகார வர்க்கமும்…
அரசியல்வாதிகளும்தான்…

சொரணை கெட்ட சமூகத்தில்…
சொரணையோடு வாழ்ந்து மறைந்த…

அனிதாவிற்கு நமது அஞ்சலி உரித்தாகுக….